தொடங்கியது இறுதி ஒருநாள் போட்டி… டாஸ் வென்ற இந்தியா எடுத்த முடிவு!

0
186

தொடங்கியது இறுதி ஒருநாள் போட்டி… டாஸ் வென்ற இந்தியா எடுத்த முடிவு!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற நிலையில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார்.

டி 20 உலகக்கோப்பைக்காக சீனியர் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில் ஷிகார் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர். அதே போல பந்துவீச்சிலும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்று நேரத்துக்கு முன்பாக இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகார் தவான் பவுலிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்திய அணி

ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்

தென் ஆப்பிரிக்க அணி

குயின்டன் டி காக் (கீப்பர்), ஜான்மேன் மலன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் (கேப்டன்), மார்கோ ஜான்சன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே