Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்… அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார்?

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்… அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை டி 20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்திய அணி 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை இன்னும் சில நிமிடங்களில் எதிர்கொள்கிறது. மெல்போர்னில் நடக்கும் இந்த போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகின. ஆனால் இப்போது எதிர்பார்த்தபடி போட்டி டாஸ் போடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்துவீச முடிவு செய்துள்ளார். இந்திய அணியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரிஷப் பண்ட் மற்றும் சஹால் ஆகியோர் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய அணியில் இடதுகை பேட்ஸ்மேன்களே இல்லை எனும் நிலை உருவாகியுள்ளது.

இந்திய அணி

ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

பாகிஸ்தான் அணி

பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஆசிப் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா

Exit mobile version