Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

நாக்பூரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடந்தது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியதுடன் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய வீரர்கள் பின்ச், க்ரீன் களம்புகுந்தனர். க்ரீன் இரண்டாவது ஓவரே ரன் அவுட் செய்யப்பட, அடுத்த வந்த டாப் ஆர்டர் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். என்றாலும், பின்ச் 31 ரன்கள் சேகரித்து வெளியேறினார். கடந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய மேத்யூ வாட் அதே பார்மை மீண்டும் மெயின்டெயின் செய்தார். ஹர்ஷல் படேல் வீசிய இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்களை அவர் விளாச, 8 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்தது. அக்சர் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா அணி 91 ரன்கள் இந்தியாவிற்கு இலக்கை கொடுத்தது. அந்த வகையில் ரோகித் சர்மா ஓபனிங் செய்து தொடங்கினார். முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸர் அடித்து ஸ்கோரை ஆரம்பத்திலேயே உயர்த்த நினைத்தார். ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக விராட் கோலியின் கே எல் ராகுலும் இருந்தனர். அதனால் இந்தியா சுலபமாக நான்கு ஓவரிலேயே 50 ரன்கள் எடுத்தது. ஐந்தாவது ஆறாவது ஓவரில் ஆஸ்திரேலியா அணியின் ஆடம் இவர்களை வீழ்த்தினார்.

நான்கு ஓவரில் 50 ரன் எடுத்த இந்தியாவிற்கு விஜய் சம்பாவின் ப்ளே ஆனது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் இரு பந்துகளிலேயே கோலி சூரியகுமார் யாதவ் என அடுத்தடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறச் செய்தார். இதனால் இந்திய டீமிற்கு சிறிது ஆட்டம் கண்டது. வெற்றியடை வேண்டுமென்று நோக்கில் கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. அப்பொழுது சாம் வீசிய பந்து இருக்கு தினேஷ் ஆறு அடித்து வெற்றியின் எல்லைக்கு கூட்டி சென்றார். பிறகு அடுத்த ஒரு பதில் இந்திய வெற்றி அடைந்தது. ஆட்டத்தில் இன்னும் நான்கு பந்துகள் மீதம் இருக்கவே இந்தியா வெற்றியடைந்துள்ளது. கடைசி வரை வெளியேறாமல் இருந்த ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version