Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய அணியில் அதிரடி மாற்றம்… இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே திணறல்

இந்திய அணியில் அதிரடி மாற்றம்… இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே திணறல்

ஜிம்பாப்வே – இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

 இன்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் சஹார் இந்த போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். பந்துவீச்சை தொடங்கிய இந்திய அணி தீயாகப் பந்துவீசி வருகின்றனர்.

இதையடுத்து தொடங்கியுள்ள போட்டியில் ஜிம்பாப்வே அணி பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியைப் போலவே தடுமாறி வருகின்றனர். தற்போது வரை 5 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்தியா தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து ரன்கள் சேர்க்க முடியாமல் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். இதனால் இந்த போட்டியையும் இந்தியா வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. ஜிம்பாப்வே போன்ற நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாடினால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு பொருளாதார ரீதியில் பலன் கிடைக்கும் என்பதால் இந்த தொடரை ஜிம்பாப்வேயில் நடத்துகின்றனர். ஆனால் ரோஹித் ஷர்மா, கோலி போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

Exit mobile version