பாவங்கள் விலகும் பனி லிங்கத்தை தரிசிக்க உதவும் இந்திய ராணுவம்!! பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள்!!
அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அதன் காரணமாக ஆண்டுதோறும் பனி லிங்கத்தை தரிசிக்க லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது.
இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிருகு முனிவர். மேலும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி தொடங்கப்பட்டது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு பக்தர்களுக்கு பல ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்த யாத்திரை 62 நாட்கள் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் அமர்நாத் பனி லிங்ககஹ்தை தரிசனம் செய்ய லச்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை பயணத்தை மேற்கொண்டார்கள். சில நாட்கள் முன்பு யாத்திரை செல்லும் பகுதிகளில் மோசமான வானிலை யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது பயணம் மீண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதனையடுத்து இந்த குகை கோவிலுக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. இதற்கு பால்டால் வழியாக சென்றால் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும். மேலும் இதற்கு ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளது. மேலும் பகதர்களுக்கு இந்திய ராணுவம் பல உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் 14 நாட்களில் இதுவரை 1.87 லட்சம் பக்தர்கள் குகை கோயிலை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த புனித பயணத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளர்கள். மேலும் பகதர்கள் வசதிகளுக்கு மருத்துவ முகாம்கள் மற்றும் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் லச்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.