Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற இந்திய வீராங்கனை! ஆர்வத்தில் மக்கள்!

Indian athlete reaches Olympic quarter-finals Interested people!

Indian athlete reaches Olympic quarter-finals Interested people!

ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற இந்திய வீராங்கனை! ஆர்வத்தில் மக்கள்!

கடந்த வருடம் கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் டோக்கியோ நகரில் மிகுந்த கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடந்து வருகிறது. பார்வையாளர்கள் இல்லாமலும் போட்டிகள் நடக்கின்றன. இருந்த போதிலும் அங்கு ஒரே நாளில் 3000 மக்களுக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இருந்த போதும் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, விளையாட்டுகள் நடைபெற்றாலும், இந்தியாவிற்கு ஒரு வெள்ளி பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. இது இந்திய மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை தந்தது. அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் நன்கு விளையாடினாலும், அந்த தகுதி ஒலிம்பிக்கிற்கு போதவில்லை. முதல் சுற்றில் தேர்ச்சி அடைந்து இரண்டாவது சுற்றில் வெளியேறி விடுகின்றனர்.

அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது. இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ராஜ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் வில் வித்தை போட்டியில் பங்கேற்றனர். இதில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின்  பிரவீன் ராஜ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோரின் அணி தோல்வி அடைந்தது.

இதேபோல் தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். ஆனால் தீபிகா குமாரி வில்வித்தை ரீகர்வ் முறையில் பூடான் நாட்டு வீராங்கனை கர்மாவை 6 – 0 என்ற கணக்கில் மிக எளிதாக அவரை வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்து இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபரை 6 – 4 என்ற புள்ளி கணக்கிலும் வீழ்த்தி உள்ளார்.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 25 – 26, 28 – 25, 27 – 25, 24 – 25, 26 – 25 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா குமாரி. இந்த வெற்றி மக்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவராவது தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பும் இந்திய மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

Exit mobile version