Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நியுசிலாந்து 273/8:சரிந்த அணியைத் தூக்கி நிறுத்திய ராஸ் டெய்லர் –கடைசி ஓவர்களில் சொதப்பிய இந்தியா!

நியுசிலாந்து 273/8:சரிந்த அணியைத் தூக்கி நிறுத்திய ராஸ் டெய்லர் –கடைசி ஓவர்களில் சொதப்பிய இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி.

நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் மற்றும் நிக்கோல்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். நிக்கோல்ஸ் 41 ரன்களில் அவுட் ஆக அதன் பின் வந்த பிளண்டல் 21 ரன்களை சேர்த்து அவ்ட் ஆனார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய குப்தில் 79 ரன்களில் அவுட் ஆனது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

அதன் பின் வந்த வீரர்களான லாதம், நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், சாப்மேன் மற்றும் சவுத்தி ஆகிய வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி வெளியேற நியுசிசிலாந்து ஒரு கட்டத்தில் 191 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் மறுபக்கம் நங்கூரம் பாய்ச்சியது போல நின்ற  ராஸ் டெய்லர் 9 ஆவது விக்கெட்டுக்கு வந்த பந்துவீச்சாளரான ஜேமிஸன் என்பவரோடு கைகோர்த்து விக்கெட்டை இழக்காமல் அணியை சரிவில் இருந்து மீட்டார்.

இந்திய பவுலர்களால் கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. ஒருகட்டம் வரை நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அதன் பின்னர் அதிரடியில் இறங்கி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. இதனால் அந்த அணியால் கௌரவமான ஸ்கோரான 273 ரன்களை சேர்க்க முடிந்தது. கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த டெய்லர் 73 ரன்களும் ஜேமிஸன் 25 ரன்களும் சேர்த்தனர். இந்தியா சார்பில் சஹால் 3 விக்கெட்களும், தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

Exit mobile version