“கப் அடிச்சு 15 வருஷம் ஆச்சு… இந்த வாட்டி வியூகம் வேறமாரி இருக்கும்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

0
159

“கப் அடிச்சு 15 வருஷம் ஆச்சு… இந்த வாட்டி வியூகம் வேறமாரி இருக்கும்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

இந்திய அணிக்கு முதல்முறையாக ஒரு ஐசிசி போட்டித் தொடரில் தலைமையேற்று நடத்த உள்ளார் ரோஹித் ஷர்மா.

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள அவர் “இந்திய அணி 15 ஆண்டுகாலமாக உலகக்கோப்பையை வெல்லவில்லை. ஆனால் இம்முறை கோப்பையை வெல்ல பல்வேறு யூகங்களை வகுத்துள்ளோம். இந்திய மைதானங்களில் விளையாடுவதற்கும் இங்கு விளையாடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால் நாங்கள் இரண்டு தொடர்களை வென்ற மகிழ்ச்சியோடு வந்துள்ளோம்.

2007 ஆம் ஆண்டு 140 முதல் 150 வரை இலக்கு நிர்ணயித்தால் போதும். ஆனால் இப்போது அதை 15 ஓவரில் சேஸ் செய்துவிடுவார்கள். இப்போது பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வரும் 23 ஆம் தேதி இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த முறைப் போலவே இந்த முறையும்  முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.