பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் இந்திய வீரர்!!
சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷு இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத் என்ற இளம் வீரர் போட்டியில் கலந்து கொண்டு ஆரம்ப முதலிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
தகுதிச்சுற்று ஆட்டத்திலும் சரி காலிறுதி போட்டிலும் சரி அதிரடியாக விளையாடி வெளிநாட்டு வீரர்களை திக்கு-முக்காட செய்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 58-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், போட்டித் தரவரிசையில் முதலிடமும், உலகத் தரவரிசையில் 12-வது இடமும் வகிக்கும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்த்து விளையாடினார்.
அதிரடியாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை, வீழ்த்தி இந்திய வீரர் பிரியன்ஷு ரஜாவத் அரை இறுதிக்கு முன்னேறினார்.
அதனைத் தொடர்ந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், அயர்லாந்து வீரர் நட் நியென்னைச் சந்தித்தார்.
இதில், ரஜாவத் 21-12, 21-9 என்ற நேர்செட்டில் அபாரமாக வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 44 நிமிடங்கள் நடைபெற்றது.
தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத் சாம்பியன்ஷிப் பட்டதை வென்று, கோப்பையுடன் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வென்று தங்கப்பதக்கங்கள், கோப்பைகள் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு தொடர்ந்து வருகிறது, குறிப்பிடத்தக்கது.