இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய வீரர்கள் அபார ஆட்டம்!!! ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடி வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று(செப்டம்பர்24) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடங்கிய வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் சதமடித்தார். 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உள்பட 104 ரன்கள் எடுத்து சுப்மான் கில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மறுபக்கம் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து 105 ரன்கள் சேர்த்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த 105 ரன்களில் 11 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். கே.எல் ராகுல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 52 ரன்கள் சேர்த்தார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சூரியக்குமார் யாதவ் அவர்கள் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். சூரியக்குமார் யாதவ் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் உள்பட 72 ரன்கள் சேர்த்தார்.
ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹசல்வுட், சாம்பா, அபாட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். தற்பொழுது 400 ரன்களை இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகின்றது.