Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி! பழி தீர்க்குமா நியூசிலாந்து?

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் டி20 தொடரில் அதை அடைவதற்குரிய அதேபோல இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில், இரண்டு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இருக்கின்ற கிரீன்பார்க் ஆடுகளத்தில் இன்று நடந்து வருகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார் அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.

இந்த இரு அணிகளின் வீரர்களின் பட்டியல் வருமாறு இந்திய அணியில் சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, உள்ளிட்டோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில், டாம் லாதம், வில்லியம் யங், கேன் வில்லியம்சன், ராஸ் டைலர், ஹென்றி நிக்கோலஸ், பிளண்டல், ரஷின் ரவீந்திரா, டிம் சவுதி, அஜாஸ் படேல், கைல்ஜமிசன், வில்லியம் சமர்வெலி.

Exit mobile version