cricket: இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா கடைசி ஆட்டத்தின் போது காயம் காரணமாக வெளியேறினார்.
இந்திய அணியின் முக்கிய தவிர்க்க முடியாத பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா. சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் முதல் போட்டியில் அணியின் கேப்டனாக வழிநடத்தினார். அவர் வழி நடத்திய அந்த போட்டி மட்டுமே இந்திய அணி அந்த தொடரில் வென்ற போட்டியாகும்.
அதனை தொடர்ந்து ரோஹித் சொதப்பலான ஆட்டம் மற்றும் கேப்டன்சி காரணத்தால் கடைசி போட்டியில் மீண்டும் பும்ரா கேப்டனாக வழிநடத்தினார். இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பவுலிங் செய்த போது இரண்டாவது நாள் 7 ஓவர்கள் மட்டும் வீசி களத்தை விட்டு வெளியேறினார். மேலும் அவர் அடுத்த இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா பந்து வீசவில்லை.
அவருக்கு முதுகில் தசை பிடிப்பு காரணமாக அவர் பந்து வீசவில்லை. இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச முடியவில்லை. இந்நிலையில் அவர் அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து தொடரில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரின் காயம் 1 கிரேடாக இருந்தால் அவர் 3 வாரங்கள் ஓய்வு பெற வேண்டும்.
இரண்டாம் நிலை என்றால் அவர் 6 வாரங்கள் ஓய்வு பெற வேண்டும், கிரேடு 3 என்றால் அவர் 3 மாதங்கள் ஓய்வு பெற வேண்டியிருக்கும். அவ்வாறு இருந்தால் சாம்பியன்ஸ் தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை. ஆனால் அவரின் காயத்தின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.