இந்திய ரசிகர்களுக்கு நடந்த சோகம்.. வாழ்வில் மறக்க முடியாத டிசம்பர் 8!! ஒரே நாளில் 3 முறை தோல்வி

0
107
Indian team lost 3 times in one day

cricket: இந்திய அணி ரசிகர்களுக்கு ஒரே நாளில் மூன்று சம்பவம் நடந்துள்ளது. அதில் ஆடவர் டெஸ்ட் மற்றும் மகளிர் ஒரு நாள் போட்டி, அண்டர் 19 ஆகிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

இந்திய ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  மோசமான பேட்டிங் காரணமாக தோல்வியடைந்தது.

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிதான் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. 372 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆனால் இந்திய மகளிர் அணி 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

11 ஆண்டாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்தியா வெல்லும் என நினைத்த நிலையில் முதலில் களமிறங்கிய வங்காள தேசம் 198 ரன்கள் அடித்து இலக்கு நிர்ணயித்தது. ஆனால் 139  ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. ஒரே நாளில் மொத்தம் 3 முக்கிய போட்டிகளில் தோல்வியடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.