இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்கியது. மேலும் இந்த தொடரில் 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளில் வென்று ஒரு போட்டியில் சமன் செய்துள்ளது. இந்த தொடரில் மீதம் ஒரு போட்டி மட்டுமே உள்ள நிலையில் இந்திய அணி அந்த போட்டியிலும் தோல்வியைத் தழுவினால் இறுதி போட்டி வாய்ப்பை நிச்சயம் இழக்க கூடும். இதனால் அடுத்து நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.
அடுத்த போட்டியில் வென்றாலும் ஆஸ்திரேலியா அணி அடுத்து விளையாட உள்ள இலங்கை தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் அல்லது இரு போட்டியிலும் சமன் செய்ய வேண்டும். அப்போது தான் இந்திய அணி இரு போட்டிக்கு செல்ல முடியும். 2021 மற்றும் 2023 ஆண்டு இறுதி போட்டிக்கு இந்திய அணி சென்றது. இந்த முறை செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளது. தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது இடத்தில் இந்திய அணியும் உள்ளது.