இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மேலும் இதில் கடைசியாக உள்ள 5 வது போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறாது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறி வருகின்றனர்.
அதற்கு காரணமாக இந்திய அணியின் சிராஜ் மற்றும் ஹெட் இடையிலான மோதல் மற்றும் விராட் கொன்ஸ்டாஸ் மற்றும் ஜெய்ஸ்வால் விக்கெட் சர்ச்சை என பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. சிராஜ் தொடர் முழுவதும் பயங்கர ஆக்ரோஷமாக இருந்தார் ஆனால் அவர் செயலில் எந்த வெளிப்பாடும் இல்லை.
அவர் முதல் போட்டியில் ஹெட் விக்கெட் எடுத்த பின் வந்த வார்த்தை மோதல் அப்போது சர்ச்சையை கிளப்பியது பின் சமாதானமாக பேசிக்கொண்டனர். நடைபெற்று முடிந்த 4 வது போட்டியில் விராட் கோலி ஆஸி அறிமுக வீரரான கொன்ஸ்டாஸ்சை சீண்டியதை யாரும் ரசிக்கவில்லை அப்போது ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில் கடுமையாக விமர்சனம் செய்து கோமாளி என்றும் எழுதினர். அதே நான்காவது போட்டியில் ஜெய்ஸ்வால் விக்கெட் ஆனதை யாரும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் இதன் காரணமாகவே இந்திய அணி அடுத்த கடைசி போட்டியில் வெற்றி பெறாது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறி வருகின்றனர்.