Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இன்று மும்பையில் ஆரம்பம்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுஇருக்கின்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது .கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து போராடி அந்த போட்டியை டிரா செய்தது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பி இருக்கிறார். அவருடைய வருகையின் காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுவது யார் என்று கேள்வி எழுந்திருக்கிறது. என்றால் அவருடைய இடத்தில் gandhi’s கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக இடம்பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் 105 மற்றும் 65 உள்ளிட்ட  ரன்களை எடுத்து அணிக்கு கை கொடுத்தார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்து சாதனை படைத்து இருப்பதால் அவரை ஓரம் கட்ட இயலாது என்று சொல்லப்படுகின்றது.

மூத்த வீரர்கள் அஜிங்கிய ரஹானே வரும் பூஜாவும் சமீபகாலமாக எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள். ஆனால் அனுபவசாலியான அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக உள்ளது ஒரு இன்னிங்சில் ரன் சேர்த்து விட்டால் பார்முக்கு திரும்பி விடுவார்கள் என்று பயிற்சியாளர் டிராவிட் சொல்கின்றார். இதன் காரணமாக, தற்சமயம் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மீது பார்வை திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது அவருடைய பேத்திக்கும் பெரிய அளவில் சோபிக்கவில்லை அவர் நீக்க படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

முதலாவது கிரிக்கெட் போட்டியில் கழுத்து வலியால் அவதிப்பட்ட விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா அதிலிருந்து குணமடைந்து விட்டதாக கேப்டன் கோலி நேற்று கூறினார். ஆனாலும் அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு மாற்று விக்கெட் கீப்பர் பரத்தை சேர்கலாமா என்பது தொடர்பாகவும் அணி நிர்வாகம் பரிசீலனை செய்கிறது. கேஸ்வரர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியிருக்கிறார். ஒருவேளை அவர்களுடன் இணைந்து தொடக்க வீரராக விளையாட வைத்தால் ரகானே, புஜாரா உள்ளிட்டோரின் இடங்களுக்கு ஆபத்து விலகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஈடுபடவில்லை இதன் காரணமாக, அவருக்கு பதிலாக முஹம்மது சுராஜ் இடம்பெறலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் யார் யாரிடம் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றியின் விளிம்பிற்கு வந்து கடைசி விக்கெட்டை நிறுத்த இயலாமல் இந்தியா தடுமாறி போனது. பொறுப்பு கேப்டன் ரகானே கடைசி இரண்டு மணி நேரத்தில் வேகப்பந்து வீச்சை பயன்படுத்தாதது விமர்சனத்திற்கு உள்ளானது. அஸ்வின் ரவீந்திர ஜடேஜா அக்ஷர் பட்டேல் உள்ளிட்டோர் சரமாரியாக ஜாலத்தை எடுத்த போதிலும் நியூஸிலாந்தின் கடைசிகட்ட பேட்ஸ்மேன்கள் சமாளித்து தங்களுடைய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றி விட்டார்கள்.

அதேபோல முதலாவது இன்னிங்சில் இந்தியா ரன் குவிப்பும், திருப்திகரமாக இல்லை என்று சொல்லப்படுகிறது குறைந்தது 400 ரன்களுக்கு மேல் இருந்தால் தான் எதிர் அணிக்கு நெருக்கடி கொடுக்க இயலும். இந்த விவகாரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. அவர் சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எந்த அணி தோல்வியை சந்திக்க வில்லை கான்பூர் தோல்வியில் இருந்து தப்பிவிட்டது அவர்களுக்கு நிச்சயம் நம்பிக்கை கொடுத்து இருக்கும். தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான தொடக்கம் தந்த போதிலும் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், உள்ளிட்ட மூத்த வீரர்கள் முந்தைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இவர்களும் தங்களுடைய பார்முக்கு திரும்பினார் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இன்னும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஆடுகளம் ஈரப்பதமாக உள்ளது புற்களும் ஓரளவு உள்ளதால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தவை எடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் அந்த அணி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக நீல் வாக்னெரை சேர்ப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. சுழற்பந்து வீச்சாளர் அஜஸ்பட்டேல் மும்பையில் பிறந்து, வளர்ந்து அதன் பிறகு நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தவர் தற்சமயம் சொந்த ஊரில் உள்ளூர் அணியை எதிர்த்து களமிறங்குவது அவருக்கு வித்தியாசமான உணர்வை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் மும்முரமாக இருப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை நியூஸிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரையில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி இதுவரையில் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 11 போட்டியில் வெற்றியும், 7 போட்டியில் தோல்வியும் 7 போட்டிகள் ட்ராவும், கண்டிருக்கிறது. நியூசிலாந்து அணி இங்கே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொன்று தோல்வியும், கண்டிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 636 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்று சொல்லப்படுகிறது.

காலை 9 மணியளவில் ஆரம்பிக்கும் போட்டியை ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

Exit mobile version