இந்தியாவின் குக் கிராம பெண்களுக்கு வந்த தடை.. ஆடை அணியக்கூடாது!! மீறினால் தண்டனை!!
ஒவ்வொரு மாநிலத்திலும் சாங்கியம் மற்றும் சம்பிரதாயங்கள் மாறுபட்டு வரும் வேளையில் இந்தியாவில் ஒரு கிராமத்தில் பண்டிகை முடியும் வரை பெண்கள் ஆடை அணிய கூடாது என்ற வினோதமான பழக்கம் இருப்பதாகவும் இதனை இவர்கள் பழங்காலத்தில் இருந்து பின்பற்றி வருவதாகவும் கூறுகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் குழு என்ற மாவட்டத்தில் பினி என்ற கிராமத்தில் வருடம் தோறும் லாஹூ கோண்ட் என்னும் தெய்வத்தை போற்றும் வகையில் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் போது, இந்த பண்டிகை தொடங்கி முடியும் வரை பெண்கள் ஆடை அணிவது இல்லையாம்.
குறிப்பாக அரக்கன் ஒருவன் அழகாக ஆடை அணிந்து அலங்காரம் செய்துள்ள பெண்ணை துன்புறுத்தி வந்ததாகவும் அந்த அரக்கனை அசுரவதம் செய்த லாஹு கோண்ட் தெய்வத்தை போற்றும் வகையில் பெண்கள் அந்த பண்டிகை முடியும் வரை ஆடை அணிகலன் ஏதும் அணியாமல் நிர்வாணமாக இருப்பதாக கூறுகின்றனர்.தற்பொழுது வளர்ந்து வரும் நாகரீகத்தால் இளம் வயது உடைய பெண்கள் மிகவும் மெலிதான ஆடை அணியலாம் என்றும் நோயுற்றவர்கள் கம்பளி அணியலாம் என்றும் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். அங்கிருக்கும் வயது முதிர்ந்த பெண்கள் எந்த ஆடையும் அணியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மது அருந்தக்கூடாது, மாமிசம் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பெண்கள் ஐந்து நாட்களில் தவறுதலாக ஏதேனும் ஆடை அணிந்து விட்டால் அவர்கள் காலம் முடியும் வரை ஏதேனும் துன்பத்திற்கு ஆளாக கூடும் என்ற சிந்தனை அந்த ஊர் மக்களுக்கு உள்ளது. எனவே அந்த கிராம மக்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பழக்கத்தை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனர்.