வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

0
245

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேலடுக்கு சுழற்சிகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசையின் காற்றுகள் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாநிலங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 24 ஆம் தேதி முதல் 26 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வானம் மேகமூட்டமாக காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் இருக்கக்கூடும். நாளை மன்னார் வளைகுடாவில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் மேலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

ஆந்திர கடலோரபகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் மற்றும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

இதை போலவே வரும் 24 முதல் 26 தேதிகளில் மன்னார் வளைகுடாவில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் மேலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

மேலும் 22 முதல் 26 ஆம் தேதிகளில் இலட்சத்தீவு பகுதிகள், கேரளா கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.