அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு இவர்களுக்கும் அழைப்பு?? வெளிவந்த புதிய தகவல்!!

0
108
DMK working on "En Video En Audio" sketch!! What is Annamalai's answer??

அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு இவர்களுக்கும் அழைப்பு?? வெளிவந்த புதிய தகவல்!!

பாஜக மாநில தலைவர் அண்ணமாலயின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.

இவரின் நடைப்பயணம் ஜூலை 28 ஆம் துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் முடிவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த 168 நாட்கள் கொண்ட நடைப்பயணம் அமையும் என்று பாஜக கட்சி நம்பிக்கையாக இருக்கிறது.

சில பகுதிகளில் மட்டுமே அண்ணாமலை நேரடியாக கலந்து கொள்வார், மீதி உள்ள பகுதிகளில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அண்ணாமலையையே முழு நடைப்பயணத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது. மேலும், இதை துவக்கி வைக்க மத்திய அமித்ஷா வருகை தர இருக்கிறார்.

இவரைத்தொடர்ந்து தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் இதுபோல வேல் யாத்திரை சென்றார்.அதன் பிறகு தான் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிட்டியது. எனவே, இதை மனத்தில் வைத்துக்கொண்டுதான் அண்ணாமலையும் பாத யாத்திரை செல்கிறார் என்று கூறப்படுகிறது.