2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அகமதாபாத் இவர்தான் கேட்டனா?

0
125

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஐபிஎல் 14வது சீசன் முடிவுற்ற உடன் புதிய 2 அணிகள் இணைக்கப்பட்டு 15வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களம் இறங்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், புதிதாக வந்திருக்கின்ற லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட அணிகள் உள் நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை இந்த ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் லக்னோ அணியின் கேப்டனாக கே எல் ராகுல் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள். ரஷீத் கான் உள்ளிட்டோர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது அதேபோல அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமனம் செய்து ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிதாக இணைந்திருக்கும் அகமதாபாத் அணியின் கேப்டனாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அணி ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் உள்ளிட்டோரையும் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ஹர்டிக் பாண்டியாவை கேப்டனாக அகமதாபாத் அணி நியமனம் செய்ய முடிவு எடுத்திருக்கிறது.