ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! தல தல தான் வந்தவுடனேயே சென்னை அணி அபார வெற்றி!

0
113

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறக்கூடிய சூழ்நிலையில், சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி திடீரென்று நீக்கப்பட்டு ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.ஆகவே அவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரை எதிர்கொண்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தலைமையில் எதிர்கொண்ட அத்தனை போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

இதனால் நேரடியாகவே ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் உள்ளிட்டோர் டோனியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது தான் இந்த தொடர் தோல்விகளுக்கு காரணம் என்று தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து தானாகவே விலகுவதாக அறிவித்தார். பின்னர் மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மராட்டிய மாநில மும்பை மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் நடந்த 47 வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் நேருக்கு நேர் சந்தித்தனர். போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.

ஆகவே சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்,டேவான் கான்வே உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்களிருவரும் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு சிக்சர், பவுண்டரி,என விளாசினர்.

சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து கான்வே 39 பந்துகளில் அரைசதம் கண்டார்.

அவர் அரை சதமடித்த பிறகு இருவரும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். மார்கோ ஜான்சன் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் கேட்ச்சானார்.

அதன்பிறகு அந்த சென்னை அணியின் கேப்டன் தோனி 8 ரன்னில் வெளியேறினார், கடைசி ஓவரில் கான்வே அதிரடி காட்ட கடைசியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தது. இதில் கான்வே 85 ரன்களுடன் கடைசி வரையில் களத்தில் நின்றார்.

இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க வீரர்களாக சிறப்பாக விளையாடிய ராகுல் திருபாதி மற்றும் அபிஷேக் சர்மா உள்ளிட்டோர் 58 ரன்கள் சேர்த்தனர். அபிஷேக் ஷர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ராகுல் திரிபாதி வந்த ராகத்தில் நடையைக்கட்டினார்.

அடுத்ததாக களமிறங்கிய மார்க்கம் 17 ரன்களில் ஆட்டமிழந்தார், விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருந்தார் அவரும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிக்கோலஸ் பூரன் கடைசிவரையில் களத்தில் நின்றார், அதோடு அவர் 64 ரன்கள் எடுத்த நிலையிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.

ஆனாலும் அந்த அணியால் சென்னை அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. கடைசியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே சேர்த்தது இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.