Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு எக்ஸ்பிரஸ்! சிஎஸ்கே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!!

IPL Chennai Super Kings Whistle Express!

IPL Chennai Super Kings Whistle Express!

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு எக்ஸ்பிரஸ்! சிஎஸ்கே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!!

உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு போட்டியாக வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன, ஐபிஎல் போட்டிகள் என்றாலே ரசிகர்கள் நினைவுக்கு வரும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் சென்னை அணி இந்த அளவிற்க்கு புகழ் பெற காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமை பொறுப்பில் உள்ளதால் மட்டுமே காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர். ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை பதினாறாவது போட்டி நடைபெற்று வருகிறது, அனைத்து போட்டிகளிலும் ஒரு அணிக்கு கேப்டனாக இருந்த பெருமை தோனியை மட்டுமே சாரும்.

சென்னை அணியானது தற்போது வரை நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது, ஒவ்வொரு முறையும் தோனி தலைமையிலான அணி விளையாடும் போது ரசிகர்கள் புதிய அனுபவம் பெறுவது போல் உணர்வார்கள், ரசிகர்களை உற்சாக படுத்த அணி நிர்வாகம் ஏதாவது ஒரு புதுமையை செய்து கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு யுக்தியை கொண்டு வர உள்ளனர்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பதினாறாவது ஐபிஎல் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் சென்னை அணி உள்ளது. இந்த நிலையில் வரும் 30 தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும்  போட்டிகளை காண சென்னை அணி நிர்வாகம் விசில் போடு எக்ஸ்பிரஸ் ரசிகர்களுக்காக இயக்கப்படுகிறது. இதில் குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சியை சேர்ந்த 750 ரசிகர்கள் கலந்து கொண்டு போட்டிகளை இலவசமாக கண்டுகளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இந்த அறிய வாய்ப்பிற்கான முன் பதிவு இன்று முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது, மேலும் இதற்கான அனைத்து செலவுகளையும் அணி நிர்வாகம் ஏற்றுக் கொள்வதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Exit mobile version