ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை இழந்த சென்னை அணி! சோகத்தில் ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

ஐபிஎல் கிரிக்கெட்டில் 15வது சீசன் தொடங்கிய அந்த நாள் முதல் சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.அதே நேரம் சொல்லி வைத்ததைப் போல இந்த இரு அணிகளுமே இந்த சீசனில் பல தோல்விகளை சந்தித்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இரு அணிகளுக்குமே சமமான ரசிகர் பட்டாளமிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படி இருக்கையில் இரு அணிகளுமே தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது ரசிகர்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் சந்தித்தனர், இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

ஆனால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியும் என்ற சூழ்நிலையில், இந்த போட்டியை எதிர்கொண்டது சென்னை அணி. இருந்தாலும் அந்த அணியால் இந்த போட்டியில் வெற்றிபெற முடியவில்லை.

இதுவரையில் சென்னை அணி விளையாடிவுள்ள 12 போட்டிகளில் 4 வெற்றி 8 தோல்வி என பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அந்த அணி இழந்திருக்கிறது. இது சென்னை அணியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேநேரம் மும்பை அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை சற்றேறக்குறைய இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Exit mobile version