ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு அணி!

0
126

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போதைய சீசன் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஐபிஎல் சீசனை வெற்றிபெறும் என நினைத்திருந்த சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில், ராஜஸ்தான் அணி இந்த ஐபிஎல் தொடரை வெல்லும் அணியாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி 6 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கும் இந்த அணியை பொறுத்தவரையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணி தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வியை சந்தித்தால் அந்த அணி எந்தவிதமான சிக்கலுமின்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறி செல்லும்.

அதோடு மட்டுமல்லாமல் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஹைதராபாத், பஞ்சாப், அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தகர்ந்து போகும். ஆகவே பெங்களூரு அணி தோல்வியுற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆகவே இந்த ஆட்டத்தில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்ற கடுமையான நெருக்கடியில் பெங்களூரு அணி உள்ளது.

அறிமுக அணியாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் 13 ஆட்டங்களில் விளையாடி 10 வெற்றி 3 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதலிடத்திலிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது.

ஆகவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த அணிக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் எந்தவித பதற்றத்திற்கும் இடமில்லாமல் விளையாடும் என சொல்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 67 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி குஜராத் அணியை சந்திக்கிறது.

பெங்களூருவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் அதேசமயம் அன்றைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென பெங்களூரு அணி கடுமையாக முயற்சி செய்யும், சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் யாருடைய கை ஓங்கும் என்று கணிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.