Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லுமா கல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் சீசன் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்திருந்த சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. இதன் காரணமாக, ரசிகர்கள் மிகப்பெரிய சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

சென்னை அணிக்கு போட்டியாக கருதப்பட்ட மும்பை அணியும் கூட இனி அடுத்த சுற்றுக்கு செல்வது மிகவும் கடினம்தான் என்ற சூழ்நிலையில் தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

நட்சத்திர வீரர்களை அதிகமாக வைத்திருக்கின்ற அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நிறைவேற்ற தன்மையுடன் விளங்கி வருவதால் தடுமாறி வருகிறது. அந்த அணி இன்னும் இருக்கக்கூடிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.

இதன் காரணமாக, இன்றைய தினம் கொல்கத்தா அணிக்கு வாழ்வா, சாவா, என்ற போராட்டக் களமாக விளங்கும் என சொல்கிறார்கள். தன்னுடைய முந்தைய லீக் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை விழுத்திய உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

தசைப்பிடிப்பு காரணமாக, கடந்த ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியில் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், நித்திஷ் ராணா, ஆன்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங்ககும். அதேபோல பந்துவீச்சில் உமேஷ் யாதவ், ஆண்ட்ரே ரசல், டிம் சவுதி, சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, உள்ளிட்டோர் பலம் சேர்த்து வருகிறார்கள்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணி அடுத்த சுற்றுக்கு வாய்ப்பில் தொடர வேண்டுமென்றால் மீதம் இருக்கின்ற 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம்.

முதல் 2 லீக் போட்டிகளில் தோல்வியும், அடுத்து 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியும், பெற்ற அந்த அணி தன்னுடைய முந்தைய 4 ஆட்டங்களில் சென்னை, குஜராத், டெல்லி, பெங்களூரு, அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது இதனால் அந்த அணி நெருக்கடியில் இருக்கிறது.

சுழல் பந்து வீசும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், உள்ளிட்டோர் கடந்த சில ஆட்டங்களில் ஆட முடியாமல் போனதும், அதிவேகமாக பந்து வீசும் இம்ரான் மாலிக் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி இல்லாததாலும், அந்த அணிக்கு பின்னடைவை சந்திக்கக் கூடிய நிலை ஏற்பட்டது.

காயம் காரணமாக, கடந்த 2 ஆட்டங்களை தவிர கட்ட நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் இந்த ஆட்டத்தில் அணிக்கு திரும்புவார்கள் என்று அந்த அணியின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் அபிஷேக் வர்மா, மார்க்ராம், ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கில் இன்னும் நல்ல பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியமாகும். பந்துவீச்சில் நடராஜன், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், உள்ளிட்டோர் மிரட்டி வருகிறார்கள்.

கல்கத்தாவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்புள்ளது.

அதே சமயத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி போராடும். அடுத்த சுற்று வாய்ப்பை நிர்ணயிக்கும் போராட்டமாக இருக்கும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று சொல்லலாம்.

Exit mobile version