ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்ற 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 49வது லீக் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கல்கத்தா அணி மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்டவை சந்தித்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் உள்ளிட்டோர் கிளம்பினார்கள் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். அவரை அவர் ஆட்டம் நடந்ததைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் 10 ரன்களுக்கு தன்னுடைய ஆட்டத்தை இழந்தார். ஹைதராபாத் அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் மிகச்சிறப்பாக தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில் ஷகிப் அல் ஹசன் அவர்களால் ரன்அவுட் ஆக்கப்பட்டார். இதன் காரணமாக, முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 50 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.
கல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல் பட்டார்கள் ஹைதராபாத் அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இதன் காரணமாக, 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 116 ரன்கள் சேர்த்தது, கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி, சிவம் மாவி, உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 116 ரன்களை எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான கில் மிகவும் அதிரடியாக ஆடி அரைசதம் எடுத்து அணியின் ரன்னை அதிகப்படுத்தினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வெங்கடேஷ் 8 ரன்கள் எடுத்த சமயத்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 7 ரன்னிலும், நிதிஷ் ராணா 25 ரன்களிலும், வெளியேறினார்கள். ஆனால் சுப்மன் கில் 57 ரன்கள் எடுத்த நிலையில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
தினேஷ் கார்த்திக் 18 ரன்களிலும், மோர்கன் 2 ரன்களிலும், ஆட்டம் இழக்காமல் இருந்தார்கள். 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 119 ரன்களை சேர்த்தது இதன் காரணமாக, அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் நடைபெறவிருக்கும் 50 ஆவது லீக் ஆட்டத்தில் பிளே ஆப் சுற்றில் ஏற்கனவே தகுதி பெற்றிருக்கின்ற சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.