14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! கொல்கத்தாவிடம் விழுந்த பெங்களூரு!

0
118

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் 14-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் விழுத்தியது.

பூவா தலையா வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் கொல்கத்தா அணியின் மிக அபாரமான பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு இயலாமல் தடுமாறிப் போனது பெங்களூரு அணி. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி 5 ரன்னிலும், டிவிலியர்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், மேக்ஸ்வெல் 10 ரன்னிலும் ,அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இந்த நிலையில், நடுவரிசை வீரர்களும் சரியாக தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால், அந்த அணியால் நூறு ரன்களை கூட கடக்க இயலவில்லை. பெங்களூரு அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட தன்னுடைய அணியை சரிவில் இருந்து மீட்க முடியாமல் தவித்தார்கள். 19வது ஓவர் வரை தாக்கு பிடித்த பெங்களூரு அணி 92 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பெங்களூர் அணியின் சார்பாக அதிகபட்சமாக படிக்கல் 22 ரன்களை சேர்த்தார். கல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள்.

இதனைத்தொடர்ந்து 93 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பாக சுப் மங்கள் மற்றும் வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தார்கள். சீரான வேகத்தில் ரன் ரேட்டை அதிகப்படுத்திய இந்த ஜோடியில் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன்கில் 34 பந்துகளை சந்தித்து 48 ரன்களை எட்டியபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களம் புகுந்த ரஸ்ஸல் உடன் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு ஆட்ட நேர இறுதியில் அதிரடி காட்டிய வெங்கடேச ஐயர் நாற்பத்தி ஒரு ரன்களும் ஆண்ட்ரே ரன் எதுவும் எடுக்காமலும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கடைசி கட்டத்தில் கல்கத்தா 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 94 ரன்களை சேர்த்தது.

பெங்களூரு அணியின் சார்பாக அதிகபட்சமாக ஒரு விக்கெட்டை கைப்பற்றினார், இதன்மூலமாக பெங்களூரு அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. துபாயில் இன்றையதினம் நடைபெறவிருக்கும் முப்பத்தி இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.