Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் குஜராத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் என்று வந்தாலே ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் சந்தித்தால் ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பு காணப்படும்.

அந்தவகையில் சென்ற வருடத்திற்கான ஐபிஎல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியிருக்கிறது. இந்த முறையும் அந்த அணி கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பார்க்க தொடங்கினர் கிரிக்கெட் ரசிகர்கள்.

ஆனால் சென்னை அணியின் கேப்டன் மாற்றப்பட்டதால் தொடர்ந்து அந்த அணி தோல்வியை சந்தித்து வருவதன் காரணமாக, ரசிகர்களிடையே அதிருப்தி காணப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொறுத்தவரையில் இந்த வருடத்திற்கான கோப்பை தற்போதுள்ள சூழ்நிலையில், குஜராத் அணிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஏனென்றால் அந்த அணிதான் புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.அதேபோல லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திலும், ஹைதராபாத் அணி 4வது இடத்திலும் இருக்கின்றன.

சென்னை அணியை பொறுத்தவரையில் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து வருகிறது. அடுத்து வரக்கூடிய 6 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டியை நெருங்க முடியும். ஆகவே எதிர்வரும் போட்டிகளில் சென்னை அணி மிகவும் துடிப்புடன் களமிறங்கும் என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை அணி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version