ஐ.பி.எல். தொடரால் இத்தனை ஆயிரம் கோடி வருமானமா?

0
126
ஐ.பி.எல். தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கோடை காலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே  உள்ளது. இந்த தொடரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வெளிநாட்டு வீரர்களும் இந்திய வீரர்களுடன் ஒரே அணியில் விளையாடுவார்கள். ஆனால் இந்த தொடரை தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.
போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடக்க இருக்கிறது. ஆனால் இந்த போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லாததால் டெலிவி‌ஷனில்  அதிக அளவு பார்க்க வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் நேரடியாக ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்புகிறது. மேலும் இந்த போட்டியை 6 மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது டிஜிட்டல் மூலம் ஒளிபரப்புவதால் ரூ.2000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.