சரியான பயிற்ச்சியில் ஈடுபடாத காரணத்தால் கோடியில் சம்பளம் வாங்கிய பிரிதிவ் ஷா தற்போது லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார்.
ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் மெகா ஏலமானது இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் 6 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். 5 வீரர்கள் 1 அன் கேப்டு வீரருமாக 6 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். அக்டோபர் 31 ம் தேதி அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
இதில் எதிர்பாராத நிறைய வீரர்கள் தங்கவைக்கப்பட்டனர், விடுவிக்கப்பட்டனர். இந்த பட்டியலில் திடீரென தனது ஆரம்ப தொகையை விட தற்போது உயர்ந்தவரும் உண்டு குறைந்தவரும் உண்டு, அதில் முக்கியமாக ரிங்கு சிங் கடந்த ஆண்டு ரூ.55 லட்சம் சம்பளம் ஆனால் இந்த ஆண்டு KKR அணி அவரை ரூ.13 கோடிக்கு தக்கவைத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் ஹென்ரிச் கிளாசென் ரூ.5 கோடிக்கு எடுக்கப்பட்டார் ஆனால் தற்போது ரூ.23 கோடிக்கு தக்கவைக்கபட்டுள்ளார்.
இதுபோன்ற வளர்ச்சிக்கு நடுவே டெல்லி அணியில் தொடக்க வீரராக களமிறங்குவார் பிரிதிவ் ஷா இவர் அண்டர் 19 கோப்பை வென்று ஐ பி எல் கலந்து நன்றாக விளையாடி வந்தார். சமீபத்தில் ரஞ்சி தொடரில் திடீரென அணியில் இருந்து நீக்கப்பட்டார் அதற்கு காரணம் இவர் சரியாக பயிற்சிக்கு வருவதில்லை, பருமனான உடல் அமைப்பு போன்ற காரணங்களால் நீக்கப்பட்டார்.
இவர் இதனை அறிந்து இந்த முறை யாரும் வாங்க மாட்டார்கள் என அறிந்து தனது ஆரம்ப தொகையை ரூ.7.5 கோடியில் இருந்து குறைத்து ரூ.75 லட்சமாக பதிவு செய்துள்ளார். இவர் ஐ பி எல் போட்டிகளில் இதுவரை 79 போட்டிகளில் விளையாடியுள்ளார், 1892 ரன்கள் சேர்த்துள்ளார்.