மார்ச் இறுதியில் தொடங்குகிறது ஐபிஎல் போட்டி! ரசிகர்கள் குதூகலம்!

0
163

கடந்த 2 ஆண்டு காலமாக ஐபிஎல் தொடர் நோய்த்தொற்று காரணமாக, துபாயில் நடைபெற்று வந்தது.

அதோடு நோய் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, ரசிகர்களின்றி களையிழந்து போயிருந்தது இந்த ஐபிஎல் போட்டிகள்.

மேலும் சென்னை அணியின் மிக முக்கியத் தூணாக இருந்த சுரேஷ்ரெய்னா அவர்களை அந்த அணி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் கைவிட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதோடு சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை விவோ நிறுவனம் நடத்தியது. இந்த ஆண்டு முதல்முறையாக டாட்டா நிறுவனம் நடத்துவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

55 லீக் சுற்று போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே டி ஒய் பாட்டில் மற்றும் நவிமும்பையிலுள்ள ப்ரொபர்ன் உள்ளிட்ட 3 மைதானங்களில் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மற்ற 15 லீக் போட்டிகள் புனே நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவிருப்பதாக தெரியவந்திருக்கிறது. தொடரில் பங்குபெறும் 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் குரூப் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் 14 சுற்றுப் போட்டிகளில் மோதவிருக்கின்றன. அதில் 1 அணி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 4 போட்டியிலும் மற்றும் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் 4 போட்டியிலும் விளையாடவுள்ளது.

அதோடு நவிமும்பையிலுள்ள ராபர்ட் மைதானத்தில் 3 போட்டியிலும் மற்றும் புனே நகரிலுள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் 3 போட்டியிலும் ஒரு அணி விளையாடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளே ஆப் சுற்றுப்போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 2 மாதங்கள் நடைபெறவுள்ள தொடரின் மாபெரும் இறுதி போட்டி வரும் மே மாதம் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.