Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாழ்வா சாவா அனல் பறக்கும் இறுதிப்போட்டியில்! அந்த இரு அணிகள் நடக்கப்போவது என்ன!

60 போட்டிகளை கொண்ட ஐபிஎல் தொடரில் இன்றைய தினம் இறுதிப்போட்டி நடக்கின்றது. மோதும் அணிகள் டெல்லி கேப்பிடல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை ஆகும்.

பிளே ஆப் சுற்றில் நடந்த அனல்பறக்கும் போட்டிகள் முடிந்து, இன்னும் சற்றே கூடுதலான எதிர்பார்ப்போடு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல்நிலை சரியாகி மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மிகப்பெரிய பலம்.

இந்த அணியை எதிர்த்து களமிறங்கும் டெல்லி அணி இந்த அணியும் சளைத்தது கிடையாது இந்த சீசனில் இந்த இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் நடந்திருக்கின்றன.

அந்த மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி தான். அதிலும் சமீபத்தில் நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதற்கு முன்பாக நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை அணி அதன் காரணமாக இறுதிப் போட்டிக்கான வியூகத்தை இந்நேரம் தெளிவாக யோசித்து வைத்திருப்பார்கள்.

இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமானால், ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்னும் மிகப்பெரிய சாதனை மும்பை இந்தியன்ஸ் அணி படைக்கும்.

இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து இருக்கின்றார்.

Exit mobile version