Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிவிலியர்ஸ் செய்த அந்த காரியத்தால்! கடுப்பான கோலி!

பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசஸ் அணிக்கு டி வில்லியர்ஸால் ஒரு நோ பால் கிடைத்தது.

ஐபிஎல் 13வது சீசனில் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு தகுதி பெற பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேறியது.

இந்தப்போட்டியில் பெங்களூரு அணி 331 ரன்கள் எடுத்து 132 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் அடித்து சன்ரைசர்ஸ் அணி வெற்றியை ருசித்தது.

இப்போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் பேட்டிங் இன் போது வாஷிங்டன் சுந்தர் வீசிய ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தை வார்னர் கவர் திசையில் அடிக்க ஸ்டம்பில் எறிந்த காரணத்தால், வார்னர் தான் பேட்டால் அடித்து விட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனாலும் வார்னர் பந்தை அடிப்பதற்கு முன் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ் பெய்ல்ஸை தட்டிவிட்டார்.

என்சிசி இன் விதிப்படி பேட்ஸ்மேன் பந்தை அடிப்பதற்கு முன்பு ஸ்டம்பையோ, அல்லது பேட்ஸ்மேனையோ தொந்தரவு செய்வது தவறு என்ற காரணத்தால் அதற்கு நோ,பால் கொடுக்கப்பட்டது.

ஆனால் டிவிலியர்ஸ் தன்னுடைய கை ஸ்டம்பில் பட்டதுமே தன் தவறை ஏற்றுக் கொண்டார். அதனால் அந்தப் பந்துக்கு நோ , பால் கொடுக்கப்பட்டு ரீ பால் வீசப்பட்டது.

Exit mobile version