Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் வருகிறது ஐபிஎல் கிரிக்கெட்! பிசிசிஐ தகவல்!

IPL

IPL

ஐபிஎல் கிரிக்கெட் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. மே 2ஆம் தேதி வரை மொத்தம் 29 போட்டிகள் நடை பெற்றன. ஆனால் வீரர்கள் சிலருக்கும், அணி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதால் போட்டிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், எஞ்சிய கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்ற போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டனர்.

இது தொடர்பாக அந்நாட்டுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஐபிஎல்லில் மீதமுள்ள கிரிக்கெட் போட்டிகள் அங்கு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும் இந்திய மட்டைப்பந்து வாரியம் அறிவித்துள்ளது.

துபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 25 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளதால் இதனால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

Exit mobile version