Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐபிஎல் : முதல் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதுகிறதா?

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது.

இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். இந்த நிலையில் அட்டவணை வெள்ளிக்கிழமையே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில்  அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது தற்போது இன்று அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் அனைவரும் எதிர்பார்த்தப்படி மும்பை, சென்னை அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன.

Exit mobile version