Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்!

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது.

உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் தொடர்ந்து மழை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்று வந்த போட்டியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் மார்க்வுட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. அந்த அணி 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் சேர்த்து விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியில் மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். எப்படி ஆனாலும் அவர்கள் இலக்கை நெருங்கி வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால் மழையால் போட்டி அயர்லாந்து அணிக்கு சாதகமாக முடிந்துள்ளது.

இதே போல சில நாட்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்க அணி வலுவான நிலையில் இருந்த போது மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

Exit mobile version