இந்த வயதில் இதெல்லாம் தேவையா?? ரஜினியை மறைமுகமாக தாக்கிய தனுஷ்!!

0
142
Is all this necessary at this age?? Dhanush indirectly attacked Rajini!!

இந்த வயதில் இதெல்லாம் தேவையா?? ரஜினியை மறைமுகமாக தாக்கிய தனுஷ்!!

திரையுலகில் பிரமாண்டமாக வலம் வரும் நடிகர்களின் வரிசையில் இருக்கின்ற ஒரு முக்கியமான நடிகர் தான் தனுஷ் ஆவார். இவர் முதலில் சினிமாவுக்கு வந்த போது, இவரின் தோற்றத்தை பர்ர்த்து அனைவரும் ஏலனம் செய்தனர்.

ஆனால் தற்போது அனைவராலும் மதிக்கக் கூடிய ஒரு பெரிய நடிகராக தனது திறமையின் மூலமாக வளரந்துள்ளார். இவரிடம் நடிப்புத் திறமை மட்டுமல்லாமல், படத்தை தயாரிப்பது, பாடல்கள் பாடுவது, இசை அமைப்பது, பாடல்கள் எழுவது என்று ஏராளமான திறமைகளை தன்னுடைய சிறிய உடலில் ஒளித்து வைத்திருக்கிறார்.

இவர் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அனைத்து திரையிலும் நடித்திருக்கிறார். எப்போதுமே படங்களில் பிசியாகவே இருக்கும் இவர் தற்போது அவருடைய ஐம்பதாவது படத்தை எடுக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை இவரே நடித்து, இவரே இயக்குவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவரின் பட வரிசையில், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு படம் தான் மரியான்.

இப்படம் பரத்பாலா இயக்கத்தில், வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளிவந்தது. மேலும், இதில் தனுஷிற்கு ஜோடியாக பார்வதி மேனன் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, இந்த மரியான் படத்தின் பத்தாவது ஆண்டை தற்போது படக்குழு கொண்டாடியது. எனவே, இதற்காக தனுஷ், ரகுமான், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அனைவரும் இணைந்து வீடியோ காலில் உரையாடினார்கள்.

அப்பொழுது தயாரிப்பாளர் வேணு ரவிச்சந்திரன், தனுஷிடம் திரும்பவும் எப்போது இது போன்ற காதல் படங்களில் நடிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு நகைச்சுவையாக பதில் கூறிய தனுஷ், சார் எனக்கு வயது நாற்பது ஆகி விட்டது.

இதற்கு மேல் காதல் செட் ஆகாது என்றும், இனிமேல் அம்மா, தங்கை பாசம் வைத்து தான் படம் என்றும் கூறி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் தனுஷ் யாருக்கும் தெரியாமல் ரஜினியை இதில் கூறுகிறாரோ என்று பேசி வருகின்றனர்.