இந்திய அணி நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் தோல்வியடைந்து நாடு திரும்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பும்ரா தான் கேப்டனாக செயல்பட்டார். இதன் பின் அனைவரும் பும்ரா கேப்டனாக வேண்டும் என கூற தொடங்கினர். இந்நிலையில் அவருக்கு கடைசி போட்டியில் காயம் ஏற்பட்டு பாதி ஆட்டத்தில் வெளியேறினார். அவருக்கு பின் விராட் கேப்டன்சியை தொடர்ந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் விளையாட மாட்டார் மேலும் அவர் பிப்ரவரியில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேரடியாக விளையாடுவார். அதனை தொடர்ந்து அடுத்து ipl தொடரிலும் விளையாடுவார். அது முடிந்தவுடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் உள்ளது. இப்படி தொடர்ந்து ஆடுவதால் அவருக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் அடுத்து டெஸ்ட் கேப்டனாக இருக்க வேண்டும் என்றால் அவர் ipl தொடரில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது பாதி தொடரில் வெளியேறி ஓய்வு எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.