Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!!

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!!

இனி ஆயுசுக்கும் மூலம் வராது வீட்டில் உள்ள பொருட்களில் நிரந்தரமாக சரி செய்யலாம்.
கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ்.

பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

மூல நோயின் வகைகள்:

இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன. அவை ஏற்பட்டுள்ள இடம், தீவிரத்தன்மை, மோசமாகும் தன்மை கொண்டு வேறுபடும். அதில் பெரும்பாலும் இரண்டு வகைகளால் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.

அறிகுறிகள்:

பைல்ஸ் இருந்தால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.எனவே இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய்
மூலத்தை ஐந்தே நாளில் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு. வயிற்றை சுத்தப்படுத்தும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். ஆசனவாயில் இருக்கக்கூடிய புண்களையும் சரி செய்யும்.

பூண்டு

பனங்கற்கண்டு

பசு நெய்

பன்னீர் ரோஜா/ நாட்டு ரோஜா

செய்முறை:

1: முதலில் உரலில் ஐந்து சுண்டைக்காய் 1 பல் பூண்டு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பணம் கற்கண்டு சேர்த்து நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.

2: அதனை அரைத்தவுடன் பின்பு அதை ஒரு கப்பில் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பசு நெய் மற்றும் பன்னீர் ரோஜா இதழ்கள் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும்.

இதனை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் மற்றும் இரவு தூங்கும் முன்பு இதனை சாப்பிட வேண்டும். இதுபோன்ற தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆபரேஷன் இல்லாமல் மூலம் முற்றிலும் சரியாகிவிடும்.

உங்களுக்கு மூலம் அதிகமாக இருந்தால் அல்லது பெரிசாக இருந்தால் இதனை தொடர்ந்து 10-15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் படிப்படியாக குறையும். இதனை சாப்பிட்ட ஐந்து நாட்களில் சரியாகவில்லை என்றால் அப்படியே விடக்கூடாது தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.

மூலம் இருந்தால் நமது உணவு முறைகளையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் அதாவது நார்ச்சத்து உள்ள உணவுகள் காய்கறிகள் பழங்கள் முக்கியமாக மாவுச்சத்து உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொண்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது.

சுண்டைக்காயில் சிறிதளவு கசப்பு தன்மை இருக்கும் அதனால் இதை சாப்பிடுவதனால் நம் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும் வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்கும்.

Exit mobile version