Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது பாத யாத்திரையா? பாவ யாத்திரையா? மணிப்பூரில் அமைதி யாத்திரை தொடங்குங்களேன்!! ஸ்டாலின் ஆவேசம்!!

Is it a pilgrimage? Pilgrimage? Start Peace Yatra in Manipur!! Stalin's obsession!!

Is it a pilgrimage? Pilgrimage? Start Peace Yatra in Manipur!! Stalin's obsession!!

இது பாத யாத்திரையா? பாவ யாத்திரையா? மணிப்பூரில் அமைதி யாத்திரை தொடங்குங்களேன்!! ஸ்டாலின் ஆவேசம்!!

மக்களவைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு அனைத்து கட்சிகளும் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாஜக மாநில தலைவரான அண்ணாமலை “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இதை துவக்கி வைக்க நேற்று மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்தார். மேலும் இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். நேற்று முதல் துவங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி பதினோராம் தேதி அன்று முடிவடைய இருக்கும் இந்த நடைப்பயணமானது 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.

இதன் முதல் கட்டமாக நேற்று ராமேஸ்வரத்தில் தனது பாத யாத்திரையை அண்ணாமலை துவங்கி உள்ளார். இந்த பாத யாத்திரையின் போது மக்களிடம் பிரதமர் மோடியின் சேவைகளை பற்றி கூறி உள்ளார்.

மேலும், மோடியின் மக்கள் பணி குறித்து புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கி வருகிறார்கள். இந்த நடைபயணமானது ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று பாஜக கட்சி நம்பி உள்ளது.

அந்த வகையில், இன்று திமுகவின் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டமானது சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

அமித்ஷா துவங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல பாவ யாத்திரை ஆகும். அமைதியாக இருக்கின்ற நாட்டில் பிரச்சனையை ஏற்படுத்த தான் இவ்வாறு பாத யாத்திரை செல்கிறார்கள்.

இவர்கள் ஏன் மணிப்பூருக்கு சென்று அமைதி யாத்திரையை துவங்க கூடாது என்று ஸ்டாலின் பேசி உள்ளார்.

Exit mobile version