வங்கிகளுக்கு தொடர் விடுமுறையா?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!
வங்கிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டு இருக்கிறது.
இது குறித்து வங்கி அதிகாரிகள் தற்போது இதற்கு பதில் அளித்துள்ளனர். அதாவது, ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆனது சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகும். அது எப்பொழுதும் போல வழக்கமான விடுமுறை தான் என்று கூறி உள்ளனர்.
அடுத்த நாளான 14 ஆம் தேதி அன்று கிருஷ்ண ஜெயந்தி அதனால் வங்கிகள் விடுமுறை என்று தவறான செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் அது பொய்யான தகவலாகும்,
ஏனென்றால் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தான் கொண்டாடப்பட இருக்கிறது. எனவே, 14 அன்று வழக்கம் போல வங்கிகள் செயல்படும்.
அதேப்போல ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி என்று கூறி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பொய் தகவல் தான். ஏனென்றால், விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் பதினெட்டாம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது.
எனவே, அன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வரும் இது போன்ற பொய்யான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
வங்கி விடுமுறை என்றால் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் எனவும் அதுவரை இது போன்ற செய்திகளை நம்பாதீர்கள் என்றும் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.