Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லியோ படத்தில் உள்ளாரா?? அர்ஜுன் தாஸ் தந்த ஷாக்கிங் பதில்!!

Is Leo in the picture?? Shocking answer from Arjun Das!!

Is Leo in the picture?? Shocking answer from Arjun Das!!

லியோ படத்தில்  உள்ளாரா?? அர்ஜுன் தாஸ் தந்த ஷாக்கிங் பதில்!!

தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தளபதி பிறந்த நாளையொட்டி பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறி இருந்த நிலையில் இன்று நள்ளிரவு  12  மணிக்கு சமூக வலைதளத்தில் லியோ பட போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டது இதனை தொடர்ந்து இந்த படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து கொண்டே சென்றது.

இந்த படமானது உச்சகட்ட எதிர்பார்ப்பை  ரசிகர்களிடையே ஏற்படுத்துகிறது. இப்படி படத்தின் பணிகள் பற்றி வெளிவரும் தகவல் ஒருபுறம் இருக்க இப்படத்தில் நடிப்பவர்களை பற்றிய விஷயங்களும் வெளிவந்து சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு வருகிறது.

அந்தவகையில் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ்  நடிக்கின்றார இல்லையா என்று ரசிகர்களிடம் கேள்வி எழ தொடங்கியது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் தாஸ் கூறியது ,பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் நான் நிறைய கற்று கொண்டேன் என்றார்.

பின்னர் லியோ படத்தில் நான் நடிகின்றேனா இல்லையா என்று உங்களில் பலரும் கேட்கிறனர். அது தெரியாமலே இருக்கட்டும் என்றார். படம் வெளியான பிறகு உங்களுக்கு ஒரு அதிர்ச்சி இருக்கிறது என்றார்.

பின்னர் எனது குரல் மூலம் எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் விஜய் ,அஜித் போன்ற வர்களின் படங்களில் கூட வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயார் என்றார்.

Exit mobile version