Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இங்கிலாந்தின் இந்த வீரரா?

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து வீரர் தாவித் மலன் 129 ரன்கள் அடித்திருந்தார். இதன்மூலம் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
கடைசி 16 போட்டிகளில் 682 ரன்கள் அடித்துள்ள தாவித் மலன், 48.71 சராசரியும், 146.66 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார்.
7 அரைசதங்களுடன் ஏழு அரைசதங்கள் அடித்துள்ளார். 877 புள்ளிகளுடன் தாவித் மலன் முதல் இடத்திலும், 869 புள்ளிகளுடன் பாபர் அசாம் 2-வது இடத்திலும், 835 புள்ளிகளுடன் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், 824 புள்ளிகளுடன் கேஎல் ராகுல் 4-வது இடத்திலும், 785 புள்ளிகளுடன் கொலின் முன்றோ 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார்.
Exit mobile version