Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

சக்கரை 480 ஆக இருந்தாலும் சரி 380 ஆக இருந்தாலும் சரி 7 நாட்களில் சரியாகிவிடும்.

மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.

40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முக்கியமாக அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.

சர்க்கரை நோய் உள்ள சிலருக்கு முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனதுபோன்ற உணர்வு, நரம்பு பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்படைதல், கண்களில் ரெட்டினா பகுதி பாதிப்படைதல், அடிபட்டால் விரைவில் ஆறாத புண் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

எனவே சர்க்கரை நோயை குறைப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்

கறிவேப்பிலை

இஞ்சி

பட்டை பொடி

ஓமம்

வெந்தயம்

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 11/2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடி 2 கொத்து கறிவேப்பிலை மற்றும் கால் டேபிள்ஸ்பூன் மிக குறைவாக ஓமம் பொடி மற்றும் ஒரு துண்டு இஞ்சியை(தோலை நீக்கவும்) சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

2: அதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் ஏனெனில் நாம் பயன்படுத்தியிருக்கும் அனைத்து பொருளும் அந்த தண்ணீரில் இறங்கி 11/2 கிளாஸ் தண்ணீரின் அளவு ஒரு கிளாஸ் ஆக மாற வேண்டும். அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதனை கலையில் வெறும் வயிற்றில் அதாவது பல் துவைத்து விட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்த பிறகு இதனை குடித்தால் போதும். இதனை ஒரு ஐந்து நாளாவது தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

இதனை மாலையிலும் தேநீருக்கு பதிலாக குடிக்கலாம் அப்படி குடித்து வந்தால் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து நார்மலாக இருப்பவர்கள் போல் கட்டுக்குள் இருக்கும்.

இதனை நாம் குடித்து வந்தால் பாத எரிச்சல் பாத வலி இது போன்ற பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. முக்கியமாக நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கிவிடும்.

Exit mobile version