எலும்பு தேய்மானம் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கிறதா?? இதை செய்வதன் மூலம் இனி ஆயுசுக்கும் இருக்காது!!
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பதால், வெளிறிய மற்றும் சோர்வு ஏற்படும்.
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது இரத்தத்தில் ஹீமோகுளோபின் செறிவு குறைவாக இருக்கும் போது ஒருவருக்கு இரத்த சோகை இருப்பதாக கூறப்படுகிறது. ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதமாகும், மேலும் இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது. பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு அதிகம்.
எனவே இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை
தினமுமே நாம் ஒரு கப் வேர்க்கடலை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்பு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கிவிடும். நான் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் புரத சத்துக்கள் உள்ளது.
கேழ்வரகு மாவு
இதில் அதிகமான கால்சியம், நார் சத்துக்கள், விட்டமின் C, B, இரும்பு சத்துகள் உள்ளன. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும்.
உப்பு
ஏலக்காய் பொடி
பேரிச்சம்பழம்
செய்முறை:
1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 100 கிராம் காய்ந்த வேர்க்கடலை எடுத்து மிதமான சூட்டில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2: பிறகு கேழ்வரகு மாவு எடுத்து மிதமான சூட்டில் நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
3: ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த வேர்க்கடலை எடுத்து அதை தோலை நீக்கி அதில் சேர்த்து பின்பு வறுத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து நன்றாக தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். இந்த சுவைக்காக 100 கிராம் பேரிச்சம்பழம் (கொட்டையை நீக்கிவிட்டு) அல்லது கருப்பட்டி நாட்டுச்சக்கரை இது போன்ற சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4: எடுத்து வைத்த அந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு நெய்யில் வறுத்து வைத்த முந்திரி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். முந்திரி தேவையானால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது நெய் மட்டும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
இதனை தினமும் மதியம் மாலை இது போன்ற நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனை அனைவரும் சாப்பிடலாம்.
கால்சியம் குறைபாடு ஹீமோகுளோபின் குறைபாடு முடி உதிர்தல் கண் பார்வை போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
நாம் பயன்படுத்திற்கும் கேழ்வரகில் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் இருக்கிறது. 100 கிராம் கேழ்வரகில் 364 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் இருக்கிறது 146 மில்லி கிராம் மெக்னீசியம் 210 மில்லி கிராம் பாஸ்பரஸ் இருக்கிறது.
சில பேர் கீழே விழுந்தவுடன் எலும்புகள் பாதிப்பு ஏற்படும் அப்படி இருப்பவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் எலும்புகளுக்கு நல்ல ஒரு பலவீனம் தரும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக சாப்பிடலாம் ஆனால் குறைவான இனிப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.