கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்த இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே 2018-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, அபு தாபியில் நடைபெற்ற டி10 லீக்கில் பங்கேற்றார். இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் வெளிநாடு லீக்குகளில் விளையாட விரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன் முடிவடைந்த கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் பிரவீன் தாம்பே இடம் பிடிப்பார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வீரர்?
