Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரையிறுதியில் இருந்து விலகுகிறாரா இந்த வீராங்கனை?

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார். ஒசாகாவின் முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  ஜேக்கப் பிளேக் மீதான தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Exit mobile version