உங்கள் குழந்தை பேசவில்லையா?? ஆட்டிஸமாக இருக்கலாம் பெற்றோர்களே உஷார்!!
இந்த நவீன காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. தற்பொழுதைய டெக்னாலஜியை உபயோகிக்கும் அளவிற்கு இக்கால குழந்தைகள் வளர்ந்து விட்டனர். இதன் பின் விளைவுகளை அவர்களது பெற்றோர்கள் நாளடைவில் சந்திக்கும் பொழுது தான் பெருமளவு சிரமப்படுகின்றனர். ஒரு கரு உருவாகுவது முதல் அதன் வெளியேற்றும் வரை குழந்தையை ஒரு நல்ல சூழலில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
அவ்வாறு இல்லை என்றால் இதன் விளைவாக தான் ஆட்டிசம் போன்ற பல பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்க நேரிடுகிறது.நூற்றில் ஒரு குழந்தைக்காவது ஆட்டிசம் பிரச்சனை உள்ளதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதன் முக்கிய காரணியாக முதலில் பார்க்கப்படுவது அம்மாவின் கருவில் இருக்கும் பொழுது அதிக அளவு மன அழுத்தம் உண்டாகுவது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் காய்ச்சல் சளி போன்றவையும் ஓர் காரணம். இதனையெல்லாம் தாண்டி குழந்தை வெளியேறும் பொழுது கழுத்தில் ஏற்படும் சிறு பிரச்சனைகளும் இதற்கு ஒரு காரணம் தான். அதேபோல முதலில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்றால் அதனை கண்டறிந்து அதற்குண்டான மருத்துவத்தை தொடங்க வேண்டும்.
இங்க பல பெற்றோருக்கும் இதுதான் ஆட்டிசம் என்பதே தெரிவதில்லை. எங்களது மகன் அல்லது மகள் திடீரென்று கோபப்படுகிறார்கள், அதிகளவு ஹைப்பர் ஆக்டிவாக நடந்து கொள்கிறார்கள் என்ற போது தான் இதனை கவனிக்கின்றனர். பொதுவாகவே குழந்தைகள் அவர்களது பெயரை சொல்லி கூப்பிடும் பொழுது திரும்பவில்லை என்றாலே பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.குறிப்பாக இந்த ஆட்டிசம் பிரச்சனை ஒன்றரை வயது முதல் தான் கண்டறிய முடியும்.
ஆட்டிசம் உள்ள குழந்தையை எவ்வாறு கண்டறிவது?
பொதுவாகவே ஒரு குழந்தை ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால் ஓரிடத்தில் உட்காரவோ நிற்கவோ மாட்டார்கள்.
அவர்களது பெயரை சொல்லி கூப்பிட்டால் கூட உடனே திரும்பி பார்க்க மாட்டார்கள்.
அவர்கள் வயதுடைய குழந்தைகளுடன் விளையாட மறுப்பர்.
அதுமட்டுமின்றி அவர்களிடம் யாரேனும் விளையாட நெருங்கினாலும் அது அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கும்.
குறிப்பாக ஆட்டிசம் பாதிப்படைந்த குழந்தைகள் பேசுவதற்கு மிகவும் தாமதமாகும்.
அவர்களுக்கென்ற தனி உலகில் இருப்பதற்கே பெரும்பாலும் விரும்புவர்.
ஆட்டிசம் குணமாக்க எளிய டிப்ஸ்:
ஆட்டிசம் என்பது ஓர் நோய் கிடையாது அதனால் இதற்கென்று தனிப்பட்ட முறையில் எந்த ஒரு மருந்து மாத்திரையும் இல்லை. இதற்கு மாறாக அவர்களது பெற்றோர்கள் அரவணைப்பு தான் அதிலிருந்து இவர்களை மீட்டுக் கொண்டு வரும்.
மேற்கொண்டு இவர்களுக்கு மற்ற குழந்தைகளை போல் வேலை கொடுப்பது அவர்களைப் பேச வைக்க முயற்சி செய்வது போன்றவை ஆட்டிசமில் இருந்து இவர்களை சிறிது சிறிதாக வெளியே கொண்டு வர உதவும்.
குறிப்பாக டிவி செல்போன் போன்றவற்றைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சானது ஆட்டிசம் உள்ள குழந்தைகளை மிகவும் பாதிக்கும். எனவே அவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.