உங்களது EB பில் அதிகமாக வருகின்றதா??அதற்கு இதுதான் காரணம்!!
தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டி வரும் நிலை தான் உள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.
அதெல்லாம் சரி மின் கட்டணம் குறையும் என்று கூறப்படுகிறதே? அதெப்படி? எப்படி குறையும்? வாருங்கள் பார்க்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் 150 யூனிட்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதில் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள 101 – 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 1.5 ரூபாயாகும்.
இந்த அடிப்படையில் 50 யூனிட்களுக்கு 1.5 ரூபாய் என்று கணக்கிட்டால் 75 ரூபாய், அதனுடன் சேர்த்து நிலையான கட்டணம் என 20 ரூபாய் சேர்த்து 95 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
உதாரணத்திற்கு ஒருவர் இருமாதங்களும் சேர்ந்து 400 யூனிட் பயன்படுத்துகிறார் எனில், அவருக்கு 100 யூனிட் மட்டுமே இலவசமாக கிடைக்கும். மீதம் 300 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதே 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள் எனில் 400 யூனிட்களுக்கு மேல் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த முறையில் கட்டணமும் அதிகம். இதே மாதம் ஒரு முறை கணக்கீடு செய்யும் போது தற்போது 520 யூனிட் பயன்படுத்துவோர், மாதம் ஒரு முறை எனும்போது சராசரியாக 260 யூனிட் பயன்படுத்துவார்கள். இதில் 100 யூனிட் இலவசம் எனும்போது, 160 யூனிட்டுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் நிலை வரும், கட்டணமும் குறையும். இதே இரு மாதங்கள் எனும்போது 420 யூனிட் கட்டணமும் அதிகம்.
இவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட் கரண்டின் விலை மதிப்பையும் பார்க்கலாம்.
100 யூனிட்க்கு 0 கட்டணம், 110 யூனிட்டுக்கு 35 ரூபாய் கட்டணம், 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் கட்டணம், 210 யூனிட்டுக்கு 260 ரூபாய் கட்டணம், 290 யூனிட்டுக்கு 500 ருபாய் கட்டணம், 390 யூனிட்டுக்கு 800 ரூபாய் கட்டணம், 500 யூனிட்டுக்கு 1130 ரூபாய் கட்டணம், 510 யூனிட்டுக்கு 1846 ரூபாய் கட்டணம், 600 யூனிட்டுக்கு 2440 ரூபாய், 700 யூனிட்டுக்கு 3100 ரூபாய், 800 யூனிட்டுக்கு 3760 ரூபாய், 1000 யூனிட்டுக்கு 5080 ரூபாய், 1200 யூனிட்டுக்கு 6400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதுபோன்று நீங்கள் பயன்படுத்தும் யூனிட் கேட்ப உங்களது கரண்ட் பில் மாறிக்கொண்டே இருக்கும்.
மேலும் நீங்கள் உங்களது மீட்டர் பாக்ஸ் சரி இல்லை என்று புகார் கொடுத்து உள்ளீர்களா?? உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் அதற்காக ஈபி ஆபீஸில் இருந்து இழப்பீடையும் பெற்றுக் கொள்ளலாம் எப்படி தெரியுமா??
உங்கள் மாநகராட்சியாக இருந்தால் 1 மணி நேரத்தில் சரி செய்து தர வேண்டும்.
அதுவே நகராட்சியாக இருந்தால் 3 மணி நேரத்தில் சரி செய்து தர வேண்டும்.
நீங்கள் கிராம பகுதியில் இருக்கிறீர்கள் என்றால் 6 மணி நேரத்தில் சரி செய்து தர வேண்டும்.
மலைப்பிரதேசத்தில் உள்ளீர்கள் என்றால் 48 மணி நேரத்தில் சரி செய்து தர வேண்டும்.
உங்களது மீட்டர் பாக்ஸ் சரியில்லை என்று ஈபி ஆபீஸில் புகார் கொடுத்து 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை நான் ஒன்று இருக்கு 100 ரூபாய்கள் விதம் என்ற மதிப்பில் ரூ.1000 வரை இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இவை அனைத்தும் பணமாக தரப்படாது உங்களது மின்கட்டணத்திலிருந்து குறைத்துக்கொள்ளப்படும்.