இவர் மனுசனே இல்ல அசுர பேட்டிங்!!  இஷான் கிஷான் செய்த  உலக சாதனை சம்பவம்!!

0
251
ishaan-kishans-world-record-incident

cricket: ஜார்கண்ட் மற்றும் அருணாச்சல பிரதேஷ் மோதும் போட்டியில் அசுரத்தனமான பேட்டிங் செய்து உலக சாதனை செய்தார் இஷான் கிஷான்.

இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி-20 தொடரில் ஜார்கண்ட் மற்றும் அருணாச்சல பிரதேஷ் இடையிலான போட்டியில் இஷான் கிஷான் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் உலகிலேயே இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையை செய்துள்ளது ஜார்கண்ட் அணி.

இந்திய அளவில் 2024 ம் ஆண்டுக்கான சையது முஷ்டாக் அலி டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்த ஜார்கண்ட் மற்றும் அருணாச்சல பிரதேஷ் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் அருணாச்சல பிரதேஷ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேஷ் அணி 20 ஓவர் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஜார்கண்ட் அணி தொடக்க வீரர்களான இஷான் கிஷான் மற்றும் உத்கர்சிங் இருவரும் 4.3 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி கனியை சுவைத்தனர்.

இதில் இஷான் கிஷான் 23 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்கள் எடுத்தார், இதில் 5 பவுண்டரிகளும், 9 சிக்சர்களை விளாசினார். 4.3 ஓவரில் 93 ரன் இலக்கை அடைந்ததன் மூலம் இதுவரை எந்த ஆணியும் செய்யாத சாதனையை செய்துள்ளது ஜார்கண்ட் அணி. இதனால் புள்ளி பட்டியலில் ஜார்கண்ட் முதலிடம் பிடித்தது.